வெள்ளி, 23 செப்டம்பர், 2016

சென்னையில் மூல நோய் சிகிச்சை!


"பைல்ஸ்" எனப்படும் "மூல நோய்" பலருக்கும் பொதுவாக ஏற்படும் பிரச்சனையாகும். மனிதனின் கீழ்குடலில் இருந்து மலவாய் வரையில் உள்ள குடல் பாதைகளில் உஷ்ணத்தின் காரணமாக பாதிக்கப்பட்டு வீக்கமாக காணப்படும். மலவாய் பகுதியில் நல்ல ரத்தத்தைக் கொண்டுவரும் குழாய்கள், அசுத்தமான ரத்தத்தைக் வெளியேற்றும் குழாய்கள் இருக்கின்றன. அசுத்த ரத்தத்தை வெளியேற்றும் குழாய்களில் ஏற்படும்  வீக்கம் மூல நோய் என அழைக்கப்படுகிறது. ஆசன வாயின் வெளிப்பகுதியில் முளை போல் சதை வீங்கி தள்ளி உட்கார, படுக்க, மலம் கழிக்க முடியாத அளவுக்கு வலி, வேதனை சிரமத்தை உண்டாக்குதல். பொதுவாக இந்த பிரச்சனையால் 50 வயதிற்குட்பட்டோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள் மற்றும் பெண்­க­ளுக்கு கர்ப்ப காலத்தில் இது ஏற்படலாம். 

மலம் வெளியேறும் பாதையில் அரிப்பு உண்டாகுதல்.
மலசிக்கல் ஏற்படுதல், மலத்துடன் இரத்தம் கலந்து வெளியேறுதல்.
ஆசனவாயில் தொடர்ந்து உண்டாகும் வலி, எரிச்சல், அரிப்பு
ஆசன வாயில் கடுமையான வலி.

மூல நோயில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன:

உள் மூலம் என்பது மலக்குடலினுள் வளரும். 
வெளி மூலம் என்பது ஆசனவாய்க்கு கீழே வளரும்.


உடல் எடை ( தொந்தி ) யால் ஏற்படும் வயிற்று அழுத்தம்.
பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கரு வளர்ச்சியால் உண்டாகும் வயிற்று அழுத்தம்.
தொடர்ந்து உட்கார்ந்தபடி அல்லது நீண்ட நேரம்  நின்று கொண்டிருத்தல்.
வேளைக்கு உணவு உட்கொள்ளாமல் ( பட்டினி ) இருப்பதால் மூலாதாரத்தில் வெப்பம் அதிகமாவதால்.
வாந்தி , இருமல் மற்றும் தும்மல்.

"பைல்ஸ்" அறுவை சிகிச்சைக்கு பிறகு குறைந்த வலியே ஏற்படும், வயிறில் தழும்பு இருக்காது, உங்களால் அதிவிரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்!. வயிற்று வலி உங்களை எந்த நேரத்தில் தாக்கினாலும் நீங்கள் அணுக வேண்டிய ஒரே மருத்துவமனை  சென்னையில் உள்ள "விக்ரம்" மருத்துவமனை, புதிய தொழில் நுட்பங்களைக் கொண்டு செய்யப்படும் சிறந்த லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை முறையில் நோயாளிகளுக்கு பைல்ஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

மேலும் தகவல்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும். 
எங்கள் இ-மெயில்  ஐடி : vikramsclinicchennai@gmail.com

வெப்சைட் : www.vikramsclinic.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக